Govt Notification
கோவை மேற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் சுத்தம், புதிய கல்வெட்டு பணிகளை ஆய்வு செய்த மேயர்
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை மேயர் க.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இன்று (24.10.2026) நடைபெற்ற இந்த ஆய்வின்போது, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45-க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, எம்.ஜி.ஆர் மார்க்கெட் நுழைவாயிலில் உள்ள பழைய கல்வெட்டினை அகற்றி, புதிய கல்வெட்டு அமைப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகளை மேயர் பார்வையிட்டார்.
அதே போல், சாய்பாபா காலனி, அம்மாசி கோனார் வீதி மற்றும் நெஞ்சம்மாள் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, உதவி ஆணையர் நர்மதா, மாமன்ற உறுப்பினர் பேபிசுதா, உதவி பொறியாளர்கள் நித்தியா, ராஜேஷ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


