Govt Notification
கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் மழை நீரை அகற்ற அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தல்
SimpliCity News Team · 10 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 45 உட்பட்ட எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை உடனடியாக அகற்றுமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் அமைச்சர் இப்பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, தேங்கியுள்ள மழை நீர் தொடர்பாக அலுவலர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் ஜெகன், உதவி பொறியாளர் நித்தியா, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
