Govt Notification
கோவை காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.10.2026) மின்தடை
SimpliCity News Team · 13 hours ago

Coimbatore: காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.10.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலேயே இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர். பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், பீளமேடு தொழில்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.