Govt Notification
கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: நாளை (20.10.2026) மின்தடை
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (20.10.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என இன்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
புராணி காலனி, அவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ-இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஆலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.