Govt Notification
மேட்டுப்பாளையம் சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது.
இந்த நீர்த்தேக்கத்தை அகற்றும் பணிகள் மோட்டார் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியை 19.10.2026 அன்று கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு செய்தார்.
