Govt Notification
கோவை செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (16.10.2026) மின்தடை
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (16.10.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மூப்பேரிபாளையம், தட்டாம்புதூர், நாரணாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் மேற்கூறிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இன்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.