Govt Notification
கோவை கிழக்கு மண்டலத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கணக்கெடுப்பு
SimpliCity News Team · 13 Oct 2026

Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.55க்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலிக்கோணாம்பாளையம், தச்சன்தோட்டம் மேற்கு வீதி மற்றும் சக்கரையார் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள்தோறும் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் சென்று, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா என கணக்கெடுத்தனர்.
இந்த கணக்கெடுப்பின்போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளை கண்டறிந்து, அதனை அமைப்பதன் அவசியம் குறித்து வீட்டு உரிமையாளர்களுக்கு விளக்கப்பட்டது.
அத்துடன், பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு, அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

