Govt Notification
கோவையில் குறிச்சி குளம், பெரியார் நூலகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்
SimpliCity News Team · 09 Oct 2026
Coimbatore: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி குளத்தின் பராமரிப்பு பணிகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இன்று (09.10.2026) குறிச்சி குளத்தை நேரில் பார்வையிட்டு, குளக்கரை பகுதிகளில் சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடவு செய்து, முறையாக பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலம், வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் நூலகத்தினை நேரில் பார்வையிட்டார். நூலகத்தின் முன்புற சாலைகளை சீரமைத்து, சாலையின் மைய தடுப்பு பகுதியில் செடிகளை நடவு செய்து பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆணையர்கள் கணேசன்(மத்தியம்), முத்துக்குமார்(தெற்கு), செயற்பொறியாளர்கள் ஜெகன், ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர்கள் எழில், சரவணக்குமார்(பொ), கனகராஜ்(பொ), மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், தனபாலன்(பொ), உதவி பொறியாளர்கள் மரகதம், ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜெகநாதன், பாலகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.