Govt Notification
கோவை காளப்பட்டி மாநகராட்சி பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கண்காட்சி
SimpliCity News Team · 7 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் போட்டிகள் இன்று (08.10.2026) வெற்றிகரமாக நடைபெற்றன. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மழைநீர் சேகரிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு மழைநீர் சேகரிப்பு கண்காட்சியும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, வாசகங்கள் (Slogan) ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.
