Govt Notification
காந்தி ஜெயந்தி: கோவையில் இறைச்சி கடைகள் அக்டோபர் 2-ல் இயங்காது
SimpliCity News Team · 5 days ago
Coimbatore: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 2, 2026 வெள்ளிக்கிழமை அன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.
"காந்தி ஜெயந்தி" தினத்தை முன்னிட்டு, 02.10.2026 வெள்ளிக்கிழமை அன்று ஆடு, மாடு, கோழிகள் மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டுவரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மேற்படி தினத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் ஆடு / மாடு அறுவைமனைகளும் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவினை மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் இரத்து போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.