Govt Notification
வாக்காளர் பட்டியலில் பதிவுகளை சரிபார்க்கும் (EVP) பணி நவ., 18ம் தேதி வரை நீட்டிப்பு
SimpliCity News Team · 24 Oct 2019

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பதிவுகளை சரிபார்க்கும் (EVP) பணியினை 18.11.2019 வரை நீட்டித்து ஆணை வழங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பதிவுகளை சரிபார்க்கும் பணி (EVP) மற்றும் வாக்காளர் பட்டியல்கள் திருத்தப் பணி 2020 ஆகிய பணிகளுக்கு கீழ்க்கண்ட திருத்திய அட்டவணையினை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது:
1 வாக்காளர் பட்டியலில் பதிவுகளை சரிபார்க்கும் (EVP) பணி வரை - 18.11.2019 (திங்கட்கிழமை)
வாக்காளர் பட்டியல்கள் திருத்தப் பணி 2020
2. ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் - 25.11.2019 (திங்கட்கிழமை)
3. கோரிக்கைகள் (சேர்த்தல்,/திருத்தம்) மற்றும் ஆட்சேபனைகள் (நீக்கல்) வழங்கும் பணி - 25.11.2019 (திங்கட்கிழமை) முதல் 24.12.2019 (செவ்வாய்க்கிழமை) வரை
4. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் - 20.01.2020 (திங்கட்கிழமை) அல்லது முன்னதாக
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்படி (EVP - Electors Verification Programme) பொதுமக்களே தாமாக முன்வந்து கீழ்க்கண்ட ஆவணங்கள் ஏதேனும் ஒன்றின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
1. இந்திய பாஸ்போர்ட்
2. ஒட்டுநர் உரிமம்
3. ஆதார் அட்டை
4. குடும்ப அட்டை மற்றும்
5. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஆவணங்கள்
பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலை Voter's Helpline App என்னும் செயலி (அ) NVSP எனும் இணைய வழி சேவை (அ) பொது சேவை மையங்கள் (அ) வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இப்பணி 18.11.2019 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விபரங்களை சேகரிப்பர். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாத பொதுமக்கள்/இறப்பு/நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் பற்றிய தகவல்களை, “மேற்குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் மூலம் தங்களது பகுதியில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். அடுத்த இரு வருடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யக்கூடியவர்களும் தங்கள் விபரங்களை வழங்கலாம்.
இப்பணியின்போது தங்களது பகுதிக்கு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பதிவுகளை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், பெயர் சேர்ப்பு (படிவம் 6), பதிவு நீக்கம் (படிவம் 7), பதிவு திருத்தம்//மாற்றம் (படிவம் 8 அல்லது 8ஏ) ஆகியவற்றிற்கு உரிய படிவங்களை அளித்து தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மாவட்ட தொடர்பு மையத்தினை 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை . தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவித்து பதிவுகளை உறுதிப்படுத்தவும், மாற்றம் செய்யவும் கோரலாம்.