Farming
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி – 2 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு
SimpliCity News Team · 19 Aug 2023
கோவை: சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும்மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் முதல் நாளான்று 1,770 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 22.08.2023 மற்றும் 23.08.2023 ஆகிய நாட்களில் நடைபெறும். சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் கீழ்க்காணும் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அவையாவன பாரம்பரிய உணவுகள் பிழிதல் அடுமனைப்பொருட்கள் உடனடி தயார்நிலை உணவுகள் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1500/-+ GST 18%) - பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம் - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. பேருந்து நிறுத்தம் - வாயில் எண். 7. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்-641003.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயபுத்தூர்-641003. அலைபேசி எண் 94885 18268 மின்னஞ்சல் [email protected] ஆகியவற்றின் மூலம் ஆர்வமுள்ளவர்கள் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related stories
Events
Cooking with Millets - Bio Basics Huddle!
18 Sept 2020
News
கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
24 days ago
News
Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education
03 Sept 2026
Education
PM's National Apprenticeship Training Camp in Coimbatore - Admissions pick up pace in Coimbatore
10 Apr 2023
Govt Notification
கோவை ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு..!
29 Jun 2022
Events
Meco Racing Formula Car Training Program (March 20)!
03 Mar 2021