Education
கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்க விழா 2026–2027
SimpliCity News Team · 08 Oct 2026

Coimbatore: கற்பகம் பொறியியல் கல்லூரியின் சார்பில் “தமிழ் மன்றம் துவக்க விழா 2026–2027” அக்டோபர் 7, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கார்த்திகைக்குமார் தலைமை தாங்கினார். விழாவின் முதன்மை விருந்தினராக விஜய் தொலைக்காட்சி புகழ் நாஞ்சில் நாவரசு செல்ல. கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அவரது உரை மாணவர்களிடையே தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. விழாவின் சிறப்பு நிகழ்வாக முதன்மை விருந்தினர் அறிமுகம் மற்றும் கௌரவிப்பு நடைபெற்றது. மேலும், தமிழ் மன்றத்தின் மாணவ, மாணவிகள் பலர் அவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் முனைவர் சுவாமிநாதன் நன்றியுரை வழங்கினார். மேலும், கற்பகம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் Dr. K.M.G ஆதி பாண்டியன், கற்பகம் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள், மற்றும் 300 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.