வேளாண் பல்கலையில் பயிர் சாகுபடி செலவு கணக்கெடுப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிர் சாகுபடி செலவு கணக்கெடுப்புத் திட்டத்தின் தேசிய அளவிலான மூன்று நாள் கருத்தரங்கு இன்று (18-1-2017) பல்கலைக்கழக பொன்விழா அரங்கில் தொடங்கியது. இதில், சுமார் 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து பொருளாதாரத்துறை விஞ்ஞானிகள் 150 பேர் பங்கேற்கின்றனர்.



கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் முதன்மை செயலர் வெ.இறையன்பு கூறுகையில், சாகுபடிச் செலவு கணக்கெடுப்பானது, நுகர்வோருக்கு நியாயமான விலையில் வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதற்கும் விவசாயிகளுக்கு நிறைவான லாபம் தரும் குறைந்தபட்ச ஆதார விலையினை அரசு நிர்ணயம் செய்வதற்கும் உதவி புரிகிறது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் எட்டு பயிர்களில் இப்பணி நடைபெறுகிறது. இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், காலத்தே தரமான தகவல்களை இத்திட்டத்தில தொகுப்பதன் மூலம் பயிர்களின் தரத்திற்கேற்ற விலை கிடைக்க வழிவகை செய்வதாக அமைகின்றது. இது நடைமுறைப்படுத்தப்படும் போது விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்" என்று கூறினார்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமை உரையாற்றுகையில், குறைந்த அளவான மழை நீரைக் கொண்டு துபாய் நாடானது தொழில்நுட்பம் மூலம் அதிக அளவு நீர் உபயோகத்தை ஏற்படுத்துவதாகவும் மணல் பாங்கான நிலவளமுடைய இஸ்ரேல் நாடானது வேளாண்மையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு சாதனை புரிந்து வருகிறது. தைவான், நெதர்லாந்து, பிரேசில் நாடுகள் வேளாண்மையில் துரித முன்னேற்றம் பெற்று வருவதையும் குறிப்பிட்டார்.

உழுதவர் கணக்குப் பார்த்தால் உழவுக்குக் கூட மிஞ்சாது என்ற பழமொழி வழக்கில் உள்ளதைப் போல குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கைக்கு இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை செம்மையாகவும் திறம்படவும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த சாகுபடிச் செலவு கணக்கெடுப்பு திட்டமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த 1971-ம் ஆண்டு முதற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது" என்று கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் முனைவர் சின்னதுரை வரவேற்புரை வழங்கினார்.

புதுதில்லி வேளாண் அமைச்சக ஆலோசகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் பொருளியல் துறைத் தலைவர் முனைவர் மணி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...