ஜல்லிக்கட்டு சம்மந்தமாக யாரேனும் கைது செய்யப்பட்டால் இலவசமாக வழக்கு நடத்திக் கொடுக்கப்படும்: சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பேட்டி


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து, ஒரே இடத்தில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவையும், அதற்கு தடைகோரிய பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பையும் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விருதுநகர் போன்ற இடங்களில் மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது. மேலும், ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் போது நடக்கும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு  தடையை மீறி நடக்கும் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தி, அது சம்மந்தமாக யாரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தமிழக வழக்கறிஞர்கள் பலர் இலவசமாக வழக்கு நடத்திக் கொடுக்க தயாராக  உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்  சொர்ணவேல் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ் உணர்வுள்ள வழக்கறிஞர்களை திரட்டி வாட்ஸ் ஆப் குழு ஒன்று தொடங்கப்படுள்ளதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு இலவசமாக வழக்கு நடத்திக்கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் "சிம்ப்ளிசிட்டி"-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :-

நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை உச்ச நீதி மன்றம் நிராகரித்துவருகிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் பல்வேறுகட்ட போரட்டங்ககளை நடத்தி வருகின்றனர். தடையை மீறி இந்த ஆண்டு தமிழகத்தில் தடைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று பல்வேறு அமைப்பினர் தெரிவித்துவருகின்றனர்.

அவ்வாறு ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தில், அந்தந்த கிராமத்தில் இருக்கும் போலீசார் தான் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ் உணர்வோடு இருக்கும் ஒவ்வொரு போலீசாரும் அவர்களை கடுமையான தண்டனை சட்ட பிரிவில் கைது செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.



இந்திய தண்டனை சட்டம் பிரிவு 141-ன் படி (பொது இடத்தில் அனுமதியின்றி கூடுதல்) ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு  சுலபமாக ஜாமீன் பெற்றுத்தர முடியும். இந்த பிரிவுக்கு அந்தந்த மாவட்ட  மாஜிஸ்திரேட்டுகள் தான் தீர்ப்பு வழங்குவர். அவர்களிடம் ஜாமீன்-க்கு விண்ணப்பித்து விட முடியும். இந்த பணியை அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் சிலர் இலவசமாக நடத்திக்கொடுக்க  முன்வந்துள்ளனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஒன்று திரட்டப்பட்டு வருகின்றனர்.

மேலும், இதற்கென பிரத்யேகமாக 'வாட்சப் குழு' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தொடங்கியுள்ளார். இக்குழுவில் கிடைக்கும் தகவல்களை தொடந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் செயல்பட உள்ளனர்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம்  என்று பலர் கருத்து கூறிவருகின்றார். அப்படி பார்க்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி கர்நாடக அரசு காவிரியில் இருந்து  தமிழகத்திற்கு தண்ணீர தர மறுத்தது. இதனால் விவசாயம் செய்ய வழியின்றி பல  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மனிதர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படுவதற்கு மவுனமாய் இருக்கும் உச்ச நீதிமன்றம், பாரம்பரிய விளையாட்டு நடக்கும் நேரத்தில் ஒரு மாநில அரசையே டிஸ்மிஸ் செய்யுமா? என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக யாரேனும் கைது செய்யப்ப்படும் வாய்ப்பு ஏற்பட்டால் எங்கள் வாட்சப் குழுவை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...