திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக கோவையை அறிவித்து கோவை மாநகராட்சி ஆணையருக்கு ஸ்வச் பாரத் மிஷன் ஓடிஎப் சான்றிதழ் வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாக தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் எஸ்வச் பாரத் மிஷன் திறந்த வெளி மலம் கழித்தல் திட்ட மேலாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனிடம்  சான்றிதழை வழங்கினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், "கடந்த 2017 ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக அறிவிக்க தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திறந்த வெளி மலம் கழிப்பிடம் இடத்தையும், பொது கழிப்பிடங்கள், சமுதாயக் கழிப்பிடங்கள், தனிநபர் கழிப்பிடங்கள் மற்றும் குடியிருப்புகள், குடிசை பகுதிகள், வர்த்தக இடங்கள், குளக்கரை ஒட்டிய பகுதிகள், வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கை புதுதில்லி  குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் மேலாளர் புவனேஷ் ரவாத், கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாக அறிவித்து அறிவிப்புச் சான்றிதழை இன்று (12.01.2017) மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரிடம் வழங்கினார்.

மேலும், கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிக்க காரணமாக இருந்து, ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருங்காலங்களில் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். 

குறிப்பாக பொது மக்கள் வீட்டிலுள்ள தனிநபர் கழிப்பிடங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் அல்லது அவர்களுடைய வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மாநகராட்சி மூலம் உடனடியாக கழிப்பிடங்கள் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும், பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தால் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, பொது மக்கள் இனி வரும் காலங்களில் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தி, கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாகவும், தூய்மையான மாநகரமாகவும் திகழ பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...