கோவை ரயில் பாதை அருகே உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கோவை ரயில் நிலைய ரயில் பாதை அருகே உள்ள கடலைக்கார சந்து 3வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 48 குடியிருப்புகளும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்க அடையாள அட்டைகள் அனைத்தும் வைத்திருந்தும் அந்த பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்காததால் வேறுவழியின்றி இருந்து வருவதாகவும், மாற்று இடம் இல்லாமல் குடும்பத்துடன் எங்கு செல்வது என்று கூறி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள 48 குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...