காந்திபார்க் பகுதியில் சாலையோரங்களில் வீடு வழங்கக் கோரி சாட்டையால் அடித்து அலைகுடி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் பகுதியில் 20க்கும் மேற்பட்ட அலைகுடி மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  வீடு இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் வசித்து வரும் நிலையில் வீடு வழங்கக் கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 



இதனிடையே, சமீபத்தில் சாலையோரங்களில் வசித்த கூடை பின்னுபவர்கள் சிலருக்கு வீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் எனக் கோரி அலைகுடி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளம் அடித்து, சாட்டயால் தங்களைத் தாக்கி நடனம் ஆடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



தங்களுக்கு வீடு இல்லாததால் குழந்தைகளை படிக்கக் கூட வைக்க முடியவில்லை எனவும், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியாக தங்களுக்கும் வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலைகுடி மக்கள் வலியுறுத்தினர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு அலைகுடி மக்கள் மேளம் இசைத்து நடனமாடியபடி நூதன முறையில் மனு அளிக்க வந்தது பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...