சி.எம்.சி காலனியில் முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள சி.எம்.சி காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெரைட்டி ஹால் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குவதாகவும், அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

இந்தபகுதியில் பெரும்பாலும் மாநகராட்சி துப்புரவுபணியாளர்களே வசிக்கும் நிலையில் குடிதண்ணீர் கூடகிடைக்காமல் அவதிப்படும் நிலை இருப்பதாகவும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலைக்குள் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெரைட்டி ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...