ஏடிஎம்மில் மோசடியில் ஈடுபட்டவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு மாறாக கணக்கு காட்டிய பெண் காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்


பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் கடந்த அக்டோபர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வந்த வேளாண் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பணம் எடுத்து தருவதாகக் கூறி அவரது ஏடிஎம் அட்டையை மோசடி செய்து பறித்துள்ளார்.

மேலும், அவருக்கு போலி அட்டையை கொடுத்தனுப்பிய அந்த வாலிபர் பேராசிரியரின் கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கோவை காட்டூர் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரியா மாலினி, செந்தில்குமாரை கைது செய்தார். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளார். 

ஆனால், காவல்துறை பதிவேட்டில் குறைந்த மதிப்பிலான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபர் செந்தில்குமாரின் உறவினர் அளித்த தகவலின் பேரில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் பிரியா மாலினி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...