அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியதாரர்கள்


அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 5 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மாதத்திற்கான ஓய்வூதியம் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படாத நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ஓய்வூதியத்திற்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அதன் வாயிலின் முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், உடனடியாக ஓய்வூதியம் வழங்காதபட்சத்தில் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...