மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம்


கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ப.காந்திமதி தலைமையில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் 2017 ஜனவரி மாதம் முதல் ஐந்து மண்டலங்களில் மாதத்தின் முதல் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, செவ்வாயன்று கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 15 மனுக்கள் அளித்தனர்.

இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...