குடிபோதைக்காக தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல் துறையினர்


கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக காட்டூர், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனத்திருட்டு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதில், குற்றவாளியைப் பிடிப்பதில் காவல் துறையினர் மத்தியில் தாமதம் ஏற்பட்டு வந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உணவு விடுதி ஒன்றில் இருசக்கர வாகனத் திருட்டு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனர். 

இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் தெரிந்ததைத் தொடர்த்து, திருட்டில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது ரஃபீக் (43) என்பதும், துடியலூரில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

செல்போன் கடையில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வாகனத்திருட்டில் ஈடுபட்டதாகவும், அதனை 1000, 500 ரூபாய்க்கு விற்று மது அருந்தி  வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை மீட்ட காவல் துறையினர், தொடர்ந்து மேலும் இவரால் இதுபோல் வேறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...