ஸ்வச் ஸர்வக்ஷன் 2017-ல் தூய்மைப்பணியில் முன் உதாரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சி திகழ வேண்டும் -மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்!


தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களுக்கிடையே ஸ்வச் ஸர்வக்ஷன் 2017 என்னும் தூய்மையான நகரங்களுக்கான மதிப்பாய்வு ஜனவரி 2017-ல் நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களுக்கிடையே ஸ்வச் ஸர்வக்ஷன் 2017 என்னும் தூய்மையான நகரங்களுக்கான மதிப்பாய்வு நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்படவுள்ளது. மத்திய அரசு மூலம் ஆண்டு தோறும் மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பாக தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஸ்வச் ஸர்வக்ஷன்-ல் நமது நகரம் சென்ற ஆண்டு பங்கேற்று தரவரிசையில் 18-வது இடம் பெற்றது. இந்த ஆண்டு ஸ்வச் ஸர்வக்ஷன் 2017-ல் கோயம்புத்தூர் மாநகராட்சியை தூய்மையான நகரமாக மாற்ற முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மேலும் ஸ்வச் ஸர்வக்ஷன் 2017-ல் தூய்மைப்பணியில் முன் உதாரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சி திகழ பொது மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். 

இதற்கு பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேகராமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, வீடு வீடாக குப்பை சேகரம் செய்ய வரும் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் குப்பைகளை தெருக்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் கொட்டுவதை தவிர்த்து குப்பைத்தொட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் நமது நகரில் தூய்மை காக்க பொது மக்கள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதை தவிர்த்து தனிநபர் கழிப்பிடம் அல்லது பொது கழிப்பிடங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் பொது மக்கள் www.swachh-survekshan.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு ஸ்வச் ஸர்வக்ஷன் 2017 பற்றி தெரிந்துக் கொள்ளலாம் மற்றும் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.” மேலும், www.swachh-survekshan.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு ஸ்வச் ஸர்வக்ஷன் 2017 பற்றி தெரிந்துக் கொள்ளலாம் மற்றும் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...