நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அளவு மற்றும் தரம் பார்த்து வாங்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் தகவல்


நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அளவு மற்றும் தரம் பார்த்து வாங்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதான் உலக நுகர்வோர் தின விழாவின் நோக்கமாகும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் உலக நுகர்வோர் தினவிழா 2016-க்கான நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

நாம் அனைவரும் பிறந்தது முதல், வாழும் காலம் தொட்டு, நுகர்வோராக வாழ்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தமான உண்மை. ஆனாலும் நாம் அனைவரும் எந்த அளவிற்கு நுகர்வியல் குறித்த கல்வி அறிவினைப் பெற்றிருக்கிறோம் என்று பார்த்தால், கடந்த அரை நூற்றாண்டில், நமது நாட்டில் மக்கள் பெரும்பாலானோர் சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாகவும், சட்டங்கள் நன்கு அறிந்தவர்களாகவும் மாறி உள்ளமையால், அவர்கள் தற்போது சூழ்நிலையினை தெளிவாக உய்த்துணரக்கூடியவர்களாகவும். உரிமைகளை அதிகாரத்தோடு கேட்பவர்களாகவும், விமர்சிக்க தெரிந்தவர்களாகவும் உள்ளனர்.

நுகர்வோர் என்பவர் பொருட்களையோ அல்லது சேவைகளையோ விலை கொடுத்தோ வாக்குறுதி கொடுத்தோ வாங்குவதை நுகர்வோர் என்கிறோம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாளில் இயற்றப்பட்டது. அந்த தினத்தை தான் தேசிய நுகர்வோர் தினவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் நுகர்வோர் நலன் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இன்று சாமான்யர்களாலும் பயன்படுத்தப்பட்டு நுகர்வோருக்கென்று சிறந்த பாதுகாப்பைத் தந்து கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கென உரிமை, தூய்மையான நலம்பயக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை மற்றும் அடிப்படை தேவைகளுக்கான உரிமை என நுகர்வோர் உரிமைகளாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளைப் போலவே நுகர்வோர்களுக்கென கடமைகளும் உள்ளன. தேவைக்கேற்ற நுகர்வு, தவறு செய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மீது புகார் செய்தல், சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்ச்சி ஆகிய கடமைகளை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

கலப்படம் என்பது நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆம். கலப்படம், கலப்படம் எங்கும் கலப்படம் அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும் என்ற பாடல் உண்டு. எங்கும், எதிலும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கும் காலம் இது. பாதிக்கப்பட்ட பின் பலன் தேடி என்ன பயன். 'வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்" என்கிறார் அய்யன் திருவள்ளுவனார். 

ஆதலால் நுகர்வோராக வாழும் நாம் ஒவ்வொருவரும் நுகர்வியல் கல்வி எனும் வாழ்க்கைக் கல்வியினை அறிந்து நலமாய் வாழ்தல் நலம். ஏமாற்றுவது குற்றம் எனில் ஏமாற்றப்படுவது பெருங்குற்றம் என்பதனை நாம் அனைவரும் அறிதல் வேண்டும். நேர்மையற்ற வணிக நடைமுறையிலிருந்தும், போலி விளம்பரங்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள நுகர்வியல் பற்றிய அறிவும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்த அறிவும் தேவை. அத்தோடு மட்டுமின்றி நுகர்வோராக நாம் நமது கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுதலே சாலச்சிறந்தது.

தமிழக அரசால் நடத்தப்படும் மாநில நுகர்வோர் சேவை மையம் நுகர்வோர் பிரச்சனைகளுக்கு மாற்று தீர்வு காணும் முறையில் செயல்பட்டு வருகிறது. நுகர்வோர் இம்மையத்தில் புகார் அளிக்கவும் நுகர்வோர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை பெறவும் இயலும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 இயற்றி 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் "27- ஆண்டு கால சாதனைகள்" என்ற கருத்தினை மையமாக கொண்டு இந்த உலக நுகர்வோர் உரிமை தினவிழா கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினத்தில் அனைவரும் நுகர்வோர்களின் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து செயல்படுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம் என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களாக தேர்வு செய்யப்பட்ட நிர்மலா மகளிர் கல்லூரி, ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் இரா.செ.அரசு மேனிலைப்பள்ளி ஒன்டிப்புதூர் தேவாங்கர் மேனிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி இடிகரை ஆகிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்கள், குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் ஜெகதீசன், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர்.பிரேமலதா, நுகர்வோர் பாதுகாப்பு குழுத்தலைவர் சென்னியப்பன், தமிழ்நாடு நுகர்வோர் நல மையத்தலைவர் ஜார்ஜ், கோவை கன்ஸ்யூமர் செயலாளர் லோகு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...