அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் சசிகலா படத்தின் மீது சாணி வீசியதால் பரபரப்பு


அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியினர் வரவேற்பு தந்துவரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

அந்த போஸ்டரில் சசிகலா புகைப்படம் இருந்துள்ளது. இதைக்கண்டு கோபமுற்ற அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் புஷ்பா என்பவர் மாட்டு சாணத்தை வீசியுள்ளார்.



இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல் துறையினர் அதனை அப்புறப்படுத்தி போஸ்டரை கிழித்து எறிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை கொன்ற சசிகலா வரக்கூடாது என்பதற்காகத்தான் போஸ்டரில் மாட்டுச்சாணத்தை வீசியதாகவும், அம்மாவின் வாரிசான தீபா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக வந்தால் தாம் வரவேற்பதாகவும், எக்காரணத்தைக்கொண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக வரவிடக்கூடாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...