பேய்கள் நடமாடும் நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனத்தை தடுக்க ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் மனு

பேய்கள் நடமாடும் இரவு 12 மணி நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனம் செய்வதை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் என்கிற வினோத் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



"வருகிற டிசம்பர் 31-ஆம் தேதியன்று இரவு புத்தாண்டு என்கின்ற பெயரில் அன்று இரவு கேளிக்கை விடுதிகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாலை விபத்துகளை ஏற்படுத்துவோர் மீதும், இதன் மூலம் கலாச்சார சீரழிவு செய்துவரும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு முடக்க வேண்டும்.

இந்து ஆகம விதிப்படி இரவு 12 மணி நேரத்தில் பேய்கள் நடமாடும் நேரத்தில் புத்தாண்டு தரிசனம் என்கிற பெயரில் தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஒரு சில கோவில்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அந்த நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது, அது நம் அழிவிற்கு காரணமாக அமையும். அதனால், இதுபோன்ற இந்து விரோத செயல்களை தடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...