தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 



இந்த முற்றுகை போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:-

மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களை புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களாக அறிவிப்பதுடன், அவசியமான நிவாரண திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

விவசாய பாதிப்பால் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும். பயிர் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். நிலுவையிலுள்ள பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலக் குழு பொருளாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், தமிழ்நாடு மாநில விவசாயத் தொழிலாளர் சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் சுப்பையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இதைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...