96-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் இன்று ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 96-வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் உள்ள நம்ம டாய்லெட்-ஐ மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, சுந்தராபுரம், முருகா நகர், பெரியசாமி சேவா விதி ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிப்பிடத்தையும், 98-வது வார்டுக்குட்பட்ட எல்ஐசி காலனியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, முருகா நகர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன கடையில் தேவையில்லாத டயர்களை அகற்றும் படி பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த அதனை உரிமையாளர் அகற்றாததால், ஒரு லோடு டயர்களை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டதை அவர் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...