புதிய ரூபாய் நோட்டுகள் அதிகளவில் பிடிபடுவது பிரதமர் மோடிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சௌந்திரராஜன் தகவல்


புதிய ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் பிடிபடுவது பிரதமர் மோடிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனை அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க மாற்று சக்தியாக உருவெடுத்து வருவதாகவும், நேர்மறையான அரசியலின் மூலம் வருங்காலத்தில் மிகப்பெரும் வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் புறவாசல் வழியாகவோ, இன்னொரு கட்சியை உடைத்தோ, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியோ ஆட்சியை பிடிப்பதில் பாஜகவிற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார். 

வருமான வரித்துறை அதிகாரிகள் பணநடமாட்டம் உள்ள இடத்திலும், அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக சந்தேகப்படும் இடங்களில் தான் சோதனை நடத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கைகளில் மத்திய அரசின் தாக்கம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார். 

பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதால்தான், மக்கள் தெருவில் நிற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது சுமத்தியுள்ள ஊழல் புகார் என்பது ஏற்கனவே உச்சநீதிமன்றத்தினால் புறந்தள்ளப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற புகார் என கூறிய அவர், ராகுல்காந்தியை பார்த்தால் பூகம்பம் வருகிறதோ இல்லையோ, சிரிப்பு தான் வருகிறது என தெரிவித்தார்.

அதிகளவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் பிடிபடுவதை கண்டு பிரதமர் மோடியே ஆச்சரியப்படுகிறார் எனவும், பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் ஊழல் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் போது மக்கள் விரும்பும் மாற்றம் வருமென தெரிவித்தார். 

பண்பாட்டுடன் கூடிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவான, வலிமையான வாதங்களை முன்வைத்து இருப்பதாகவும் அவர் கூறினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போராட்டங்கள் நடத்துவதினால் எந்த தீர்வும் வராது எனவும், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...