நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தகவல்


நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பண பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர்  யார் என்பது குறித்து அந்த கட்சியின்பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும் எனவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் நிலவிவரும் பணப்பிரச்சனைக்கு நிதி அமைச்சகம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இதை அணுகியதுதான் காரணம் எனவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக சிறியதாக இருப்பதால் அவற்றை ஏடிஎம் மையங்கள் மூலம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுப்பிபிரமணியசுவாமி அப்போது தெரிவித்தார்.

மேலும், தன்னுடைய தலைமையில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற விவகாரம் தொடர்பான கூட்டம் நடந்த போது தான் 4 விதமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கியதாகவும், அவை கடைபிடிக்கபடவில்லை என குற்றம்சாட்டிய அவர் இந்த திட்டம் அறிவிக்கப்படும் முன்னரே இதுகுறித்து வெளியில் கசிய விட்டவர்கள் மீது வழக்குப்பதியக் கோரி மூன்று முறை மத்திய அரசிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பொது அவர் தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...