மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

கோவை, 48வது வார்டுக்குட்பட்ட ரத்தினபுரி 7வீதியில் திமுகவின் வட்ட செயலாளர் செல்வமணி என்பவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கோவை, ரத்தினபுரி பகுதியில் 48வது வார்டின் திமுகவின் வட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் செல்வமணி. இவர் அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறித்து அவதூறாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி அதிமுக மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிதி குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட அதிமுக வினர் 48வது வட்ட திமுக அலுவலகம் முன்பாக போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறு பேசிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...