முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலக்குறைவு எதிரொலி: கோவையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் நள்ளிரவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நள்ளிரவே மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். 

இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இயல்பாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...