ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் மாராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்ட மாநகராட்சி ஆணையம்


கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் அளவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த டிச. 2 மற்றும் 3 ஆகிய 2 தினங்களில் மட்டும் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் அளவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு 32, காளப்பட்டி, காஞ்சிமா நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 40.2 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வார்டு 5, கவுண்டம்பாளையம், எஸ்.பி நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, வடக்கு மண்டலம், வார்டு- 29, சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 1 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு- 41, மணியகரம்பாளையம் சாலை, அபிராமி நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 14 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், வார்டு-97, குறிச்சி, விக்னேஷ் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.2 கோடி மதிப்பிலான 22 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வார்டு-87, குனியமுத்தூர், கஸ்தூரி நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.6 கோடி மதிப்பிலான 24 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு-72, நேரு மைதானம் அருகில் உள்ள ஆடிஸ் தெருவில் 60 சென்ட் அளவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...