ரூபாய் நோட்டு தடையின் மூலம் கார்ப்ரேட்டுக்கு பெரிய லாபமும், மக்களுக்கு பெரும் சுமையும் ஏற்படுத்துவதே மோடியின் திட்டம் - பி.ஆர். நடராஜன்


பண மதிப்பு நீக்க உத்தரவால் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான பதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமான கோவை. மோடி அரசின் உத்தரவால் தொழிற்துறை, வர்த்தகம், கட்டுமான தொழில்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் பாதியாக குறைந்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.a

இதுகுறித்து சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் பாஜக அரசு முன் தயாரிப்பு இல்லாமலும் போதிய அளவு புதிய பணம் அச்சிட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பாமல் பழைய ரூ.500, 1000 செல்லாது என்று உத்தரவிட்டதைத்தொடர்ந்து வங்கிகள், வங்கி ஊழியர்கள் பல்வேறு வகையில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

செல்லாத நோட்டுகள் பெருமளவு வங்கிகளுக்கு வந்துவிட்ட நிலையில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் பணம் திரும்ப வழங்கக் கூடிய அளவிற்கு தற்போது வங்கிகளுக்கு போதிய நிதி இல்லாமல் அனைத்து தரப்பினரும் தவித்து வருகின்றனர். 

கோவையில் 58 கிளைகளுடன் செயல்படக் கூடிய ஒரு வங்கிக்கு 300 கோடி தேவையென்றால் 30 கோடி மட்டுமே அனுப்பி வைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு தற்போது மோடி அரசு அறிவித்துள்ள தொகையை கூட வழங்க முடியாமல் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்களை தவிர இதர ஏடிஎம்கள் பணம் இல்லை என்ற போர்டு தொங்குகிறது. வங்கிகளில் போதிய பணம் இல்லாத காரணமாக வாடிக்கையாளர்கள் வாரம் 24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது. பண நெருக்கடியில் நாடே தவிக்கும் போது பிக் பஜார் போன்ற கார்ப்ரேட் தனியார் நிறுவனங்களின் வியாபாரத்தை பாதுகாக்க பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது மோடி அரசு.

மோடி அரசின் ஸ்வைப்மெசின் திட்டத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் பொருள் வாங்கும் போது இரண்டரை சதவிகிதம் பணம் பிடித்தும் செய்யப்படும். இதன் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பெரிய லாபமும், மக்களுக்கு பெரும் சுமையும் ஏற்படுத்தும் திட்டம் தான் மோடியின் பண மதிப்பு நீக்க உத்தரவு. நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தினை அச்சடிக்காமல் கேஷ்லாஸ் திட்டம் என்ற பெயரில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வர்த்தகத்திற்கு சாதகமாக மின்னனு பண பரிமாற்றம் என்ற பெயரில் சிறு, குறு வியாபாரிகளை இல்லாமல் செய்யும் மோடி அரசின் மோசடி திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும், வன்மையாக கண்டிக்க முன் வர வேண்டும். 

வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் கருப்புப் பணம் குறித்த தகவலையடுத்து சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சோதனையில் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. இதுபோன்ற ரகசியம் காப்பது பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை அரசு மறைமுகமாக பாதுகாக்கிறதோ என்கிற எண்ணம் ஏற்படுவதாக உள்ளது.

உடனடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்ட விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...