தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி




கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் அதிநவீன மின்னனு வாகனம் மூலம் சாதனை விளக்க குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். 



இந்த புகைப்படக் கண்காட்சியில் தேசிய தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி புகைப்படங்களும், முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த நலத்திட்டங்கள், அரசு விழாக்கள், தமிழக அரசின் சிறப்புத்திட்டங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கனகராஜ், அம்மன் கே.அர்ஜுனன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி செய்திமக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...