சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகில் கோவை மாநகராட்சியும் ரூட்ஸ் நிறுவனமும் இணைந்து சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இன்று (30.11.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். 



சாலை சுத்தம் செய்யும் வாகனம் சி.எஸ்.ஆர். புராஜக்ட் மூலம் “கிளீன் கோயமுத்தூர்” சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது. இந்த சாலை சுத்தம் செய்யும் இயந்திரமானது மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் உள்ள மண், கல் போன்ற இடர்பாடுகளையும், சாலையின் ஒரு புறங்களிலும் சேருகின்ற குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பேணி காப்பதற்கு ஏதுவான பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலத்திற்குள் நீண்ட சாலை தூரத்தினை சுத்தம் செய்யும், மிகுந்த செயல்திறனும் நவீன தொழில்நுட்பங்களும் கொண்ட இயந்திரமாகும். 



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், ரூட்ஸ் குழும நிறுவனத் தலைவர் ராமசாமி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் கார்த்திகேயன், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிஞர் கவிதாசன், தலைமை நிதி அதிகாரி ரவி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன செயல் இயக்குநர் சந்திரசேகர், ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவன செயல் இயக்குநர் சரவணசுந்தரம் உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...