மாநகராட்சி தெற்கு பகுதியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக முதலமைச்சரின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 88, 89, 90, 91, 92, 93 ஆகிய வார்டு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 93 வது வார்டில் சக்தி நகர் பகுதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினையும், 88-வது வார்டுக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் பிரதான சாலை மற்றும் பழனி ஆண்டவர் கோவில் வீதியில் ரூ.42.50 லட்சம் மதிப்பிலான வடிகால் கட்டும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவில் வீதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணியையும், 89வது வார்டு இராமசெட்டிபாளையம் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினையும் துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, 90-வது வார்டுக்கு உட்பட்ட கோவைப்புதூர் என்.பிளாக் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார். பின், அதேப் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு உணவு பரிமாறினார்.



பின், 91-வது வார்டு குளத்துப்பாளையம் பள்ளி அருகில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடை  அமைக்கும் பணியினையும், மகாலட்சுமி நகர் குமரன் ஹால் அருகில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணியர் நிலற்குடை பணியினையும் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, 92-வது வார்டு சக்தி விநாயகர் கோவில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிட மையத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...