ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் அன்பு கூடல் நிகழ்ச்சி

ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் அன்பு கூடல் நிகழ்ச்சி என்னும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள மைக்கேல் ஜாப் பள்ளியைச் சேர்ந்த 60 ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் காப்பகத்திற்கு வந்திருந்தனர், இப்பள்ளியில் உள்ள குழந்தைகள் யாவரும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் ஆவார்கள் .



பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என அன்பு கூடல் நிகழ்வு அனைவரது இதயத்திலும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.













மணிப்பூர், சிம்லா, குஜராத் சேர்ந்த குழந்தைகள் அவர்களது பாரம்பரிய பாடல்கள் பாடி முதியோர்களை மகிழ்விக்க, ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக தமிழ் நாட்டு பாரம்பரியமான சிலம்பாட்டம் மற்றும் ஆடல் பாடல்கள், மேஜிக் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.



நிறைவாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஜெயாமாகேஷ் முதியவர்களும், குழந்தைகளும் மனதார அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

காப்பகத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வருவது இயல்பு, பல நிகழ்சிகள் அரங்கேற்றம் ஆவதும் இயல்பு. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு வந்து அங்குள்ள முதியோர்களை மகிழ்விக்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு தெளிவும் ஆறுதலும், மனதில் நிறைவும் ஏற்படுத்துகிறது. அது மட்டும் அல்லாது யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை, ஆதரவுற்றோர் தான் என்பதும் வெளிப்படுத்துகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...