ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு


உடல் பருமன் எதிர்ப்பு  விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர்  26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.



ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் 136.1 யோகா அமைப்பும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இணைந்து நடத்திய இந்த உடல் பருமன் எதிர்ப்பு யோகா நிகழ்ச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று யோகாவில் ஈடுபட்டனர்.



இந்நிகழ்ச்சியில், யோகா வல்லுநர் லோகேஷ்வரி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிகப்படியான உடல் எடையும், பருமனும் மற்ற உயிரைப் பறிக்கும் நோய்களைப் போன்றதே. ஆண்டிற்கு சுமார் 2.8 மில்லியன் மக்கள் அதிகப்படியான உடல் பருமன் காரணமாக உயிரிழக்கின்றனர். மற்ற உயிர்கொள்ளும் நோய்களுக்கு உடல் பருமனும் ஒரு பாதையாக அமைகிறது. உடல் பருமனுக்காக தகுந்த சிகிச்சை பெறாமல் இருந்தால் புற்றுநோய், இருதய நோய், இரத்த அழுத்தம், கொழுப்புகள் அதிகரித்தல், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் எளிதில்  தாக்கும் அபாயம் உள்ளது. உடல் பருமன் காரணமாக பெரும்பாலான மக்கள் மன அழுத்தமும், உலவியல் ரீதியான வேதனையையும் சந்தித்து வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாடான உணவும், தகுந்த பயிற்சியுமே இதற்கான சிறந்த சிகிச்சை என பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சியும், உணவு பழக்கங்களுமே இதற்கு காரணம். இந்தியாவில் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 41 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, குழந்தைகளும் இந்த நோயினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

மக்கள் தங்களது உடல் எடை மற்றும் பருமன் குறித்து பி எம்  ஐ மூலம் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். கலோரிகள் நிறைந்த  நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவுகளை உட்கொண்டு தகுந்த உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மருத்துவ சிகிச்சைகள் இன்றி சிறப்பான உடல் ஆரோக்கியத்தினை பெற முடியும்'' என லோகேஷ்வரி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி துவக்கி வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ், யோகா ஆசிரியர் ரிஷிகுமார் சந்தோஷ், 136.1 யோகா அமைப்பின் இயக்குநர் வி.செந்தில் குமார், பேராசிரியர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...