இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணா அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா!

கோவை: ஆர்.எஸ் புரம் பாரதீய வித்யாபவன் பள்ளி கலையரங்கில் இன்று மாலை 6 மணியளவில் கர்நாடக இசையில் மகசேசே விருது பெற்ற இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர்(சிஐஐ) மற்றும் அத்வைத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி சாம் வரவேற்புரை வழங்கினார்.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கலந்து கொண்டார். 

பின்னர், அவர் பேசுகையில், 'டி. எம் கிருஷ்ணா இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து சிறு வயது முதலே கர்நாடக இசை ஞானம் பெற்ற கலைஞர். புகழ்பெற்ற மறைந்த செம்மங்குடி ஸ்ரீ நிவாச அய்யரிடம் ஏழு வருடங்களுக்கு மேல் சிறப்பு பயிற்சி பெற்றவர். 



இவருடைய முதல் சங்கீத நிகழ்ச்சி 12 வயதிலே தொடக்கி பல உயரங்களை கடந்து இன்று சிகரம் தொட்டது. இன்று இவருடைய இந்த மகசேசே விருது அவருடைய இசைக்கலைஞர் மாகுடத்தை உலகரியச் செய்தது' எனக் கூறினார்.

பின்னர், இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணனுக்கு, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பாராட்டி விருதினை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியினை, தென்னிந்திய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், ராஜலட்சுமி கலை நிறுவனம், மனோரஞ்சிதம் (அய்யப்பன் பூஜா சங்கம்), கோவை இசை சங்கம் மற்றும் அவியாசம் முதலிய நிறுவனங்கள் இணைத்து வழங்கின.

இதில், கர்நாடக வயலின் இசைக்கலைஞர் வித்வான் ஸ்ரீ ராம்குமார், இசைக்கலைஞர்கள் சுகுமார், நாகசுந்தரம், சிவகிருஷ்ணன், சந்திரசேகர் பகவதி, சிவராம குமார் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

⁠⁠⁠⁠

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...