500, 1000 ரூபாய் தடையால் தங்க நகை தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் தடை அறிவிப்பால் தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல ஆயிரம் குடும்பத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அகில இந்தியா அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மூன்றாம் இடம் என்பது உலகறிந்த உண்மை. இத்தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அதிர்ச்சி தகவல் வழங்கியது. இதனால், கடந்த 15 நாட்களாக தங்க நகை வியாபாரிகள் வழங்கும் ஆர்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தயார்நிலையில் உள்ள புதிய தங்க நகைகள் விற்பனையும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் உள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையினால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 55 ஆயிரம் குடும்பத்தினர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால்,  தொழில் சமுதாயத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு மாவட்ட அரசின் மூலம் விரைவில் மக்கள் வங்கியில் செலுத்திய பணத்தை புழக்கத்திற்கு வழங்க வேண்டி அழுத்தம் தர வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...