அன்பான குடும்ப சூழல் வழங்க வேண்டும் என்பதையே குழந்தைகள் உரிமை சாசனம் வலியுறுத்துகிறது என ஆட்சியர் தகவல்

அனைவருக்கும் அன்பான அரவணைப்பான குடும்ப சூழல் வழங்க வேண்டும் என்பதையே குழந்தைகளுக்கான உரிமை சாசனம் வலியுறுத்துகிறது என குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைகள் குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம், அண்ணபூர்னா கலையரங்கில் ஜக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் இந்திய குழந்தைகள் நலசங்கங்கள் இணைந்து நடத்தும் மண்டல அளவிலான குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கு துவக்கவிழா நிகழ்ச்சி முன்னாள் அரசு முதன்மை செயலர் பி.நிர்மலா முன்னிலையில் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கோவை மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசியதாவது:-

குழந்தைகள் நல்லமுறையில் குடும்பங்களில் வளர்வதற்காக சூழலை பெற்றோரும், அரசும், தன்னார்வ தொண்டு அமைப்பினர்களும் உருவாக்க முணைய வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். எல்லா குழந்தைகளும் குடும்பத்தில் பெற்றோரின் அன்பான அரவணைப்பில் வளர்வதற்கான உரிமை உண்டு. தற்போது உள்ள சூழலில் எல்லா குழந்தைகளுக்கும் குடும்பத்தில் வளர்வதற்கான சூழல் இல்லாமல் போவதை நாம் காண்கிறோம்.

தொடரும் போர்கள், வன்முறை சமுதாய கலவரங்கள், நோய்கள், மாறிவரும் சமூகக் கட்டமைப்புகளால் சிதறுண்டு போகும் குடும்ப அமைப்பு முறை, வேலை தேடி இடம் பெயரும் நெருக்கடி, குடும்பத்திற்குள் நடைபெறும் வன்முறைகள் என்று பல காரணிகாளால் குடும்பங்கள் உடைந்து குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பல்வேறு காரணங்களால் முறையான கவனிப்பும் பெற்றோரின் அரவணைப்பையும் பெற இயலாத குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகளை உறுதி செய்வதற்கான அடிப்படை கருத்துக்களையும் உத்திகளையும் பற்றி சிந்திக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது.

தற்போது குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்வதும் இம்முறைகளைக் குறித்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இவ்வகையான மாற்று பராமரிப்பு முறைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் முதல் முறையாக இந்தியாவில் இளைஞர் நீதி சட்டம் 2015-ல் தான் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்யத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கையும் தண்டனையும் உண்டு என்றும் கூறுகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க ஆரம்பமாகும்.

குழந்தைகளுக்கு ஒரு குடும்பம் வேண்டும், பெற்றோரின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்ற அடிப்படை உரிமை சார்ந்த காரணத்தினாலேயே குழந்தையின் உரிமையை நிலைநாட்ட இது போன்ற கருத்தரங்கு ஒரு சிறந்த கருவியாக உள்ளது.

குழந்தைகளே நம் எதிர்காலம் என்ற கருத்து உண்மையிலேயே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் குழந்தைகளை செவ்வனே வளர்வதற்கும், அவர்களது குழந்தைப் பருவம் பாதுகாக்கப்படுவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது அரசாங்கம் மட்டுமே தனித்து செய்து முடிக்க வேண்டிய பணியன்று, சமூக உறுப்பினர்கள் அனைவரும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் பங்களிப்பது இன்றியமையாதது ஆகும். அதற்கான தங்களது பங்களிப்பினை சிறப்பாக வழங்க வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கருத்தரங்கில் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்திரா தணிகாச்சலம், பொது மேலாளர் கிரிஜாகுமாரபாபு மற்றும் 11 மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...