மாநகராட்சி ஆணையர் உத்தரவால் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி வரி செலுத்தாத 452 குடிநீர் இணைப்புகள் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க், தபால் நிலையம், பாலகம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24ம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மாநகராட்சியின் சார்பில் மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களிலேயே செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். 

இதனிடையே, கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 23ம் தேதி வரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் மாநகராட்சி வரி செலுத்தாமல் இருந்த வரிதாரர்களின் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம் 51-ஆம் வார்டு பகுதியில் 2013 முதல் 2017 வரை மாநகாட்சி வரியாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 340 ரூபாய் செலுத்தாத வணிக வளாகத்தின் முன்பு மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



அக்கடையின் உரிமையாளர் உரிய வரிப்பணத்தினை செலுத்தியபின் அந்த குப்பைத் தொட்டிகள் அங்கிருந்து அகற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...