500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாததால் விரக்தி அடைந்த தனியார் வங்கி காவலாளி குடிபோதையில் ரகளை



500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாததால் விரக்தி அடைந்த தனியார் வங்கி காவலாளி குடிபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்த ஐயப்பன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. குழந்தைகளுக்கு வழக்கமாக வாங்கும் அரிசியை வாங்க முடியாமல் ரேசன் அரிசி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அவர் கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஐயப்பன் அங்கிருந்த அரசு கார் ஒன்றில் லேசாக மோதினார். இதையடுத்து அவரது இருசக்கர வாகன சாவியை அங்கிருந்த ஓட்டுனர் ஒருவர் எடுத்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த ஐயப்பன் அரசு அதிகாரிகளையும் அரசையும் விமர்சித்து கூச்சலிட்டார். தொடர்ந்து ஏக வசனத்தில் அரசு அதிகாரிகளை விமர்சித்த அவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினரோடும் ஐயப்பன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக கோவை பந்தயசாலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...