கேஎம்சிஎச் சார்பில் ''முதியோர் மறுவாழ்வு'' மற்றும் ''விளையாட்டு மறுவாழ்வு'' கருத்தரங்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை உடற்பயிற்சிக் கல்லூரியின் சார்பில் 1994ம் ஆண்டு உடற்பயிற்சி இளங்கலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு உடற்பயிற்சி முதுகலை பட்டப் படிப்பையும் மற்றும் 2006ம் ஆண்டில் தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.



உடற்பயிற்சித் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக கேஎம்சிஎச் உடற்பயிற்சிக் கல்லூரி இடைவிடாத முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டம் 100-வது முறை நடத்தப்பட்டதைக் கொண்டாடிட ''விளையாட்டு மறுவாழ்வு'' என்ற தலைப்பில் நவம்பர் 18ம் தேதி ஒரு பயிலரங்கமும், ''முதியோர் மறுவாழ்வு'' என்ற தலைப்பில் நவ. 19ம் தேதியன்று ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கும் நடைபெற்றது.

இந்த தேசிய கருத்தரங்கு மற்றும் பயிலரங்கை கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கேஎம்சிஎச் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் தவமணி டி.பழனிசாமி, கேஎம்சிஎச் மருத்துவமனை இயக்குநர் அருண் என்.பழனிசாமி, கேஎம்சிஎச் முதல்வர் வி.குமரன், தலைமை செயல் அலுவலர் புவனேஸ்வரன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, 100-வது தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டத்தை குறிக்கும் வகையில் ''Souvenir 16'' என்ற நூலை நல்ல ஜி.பழனிசாமி வெளியிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...