பாகிஸ்தான் கடற்படையினர் நடவடிக்கை இந்திய மீனவர்கள் 43 பேர் கைது

பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 43 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.  இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் அத்துமீறியதாக கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை ஒட்டிய அரபிக்கடற்பகுதியில் நேற்று இந்திய மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தனர்.

அதில் இருந்த 43 மீனவர்களை கைது செய்து கராச்சிக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது மீனவர்கள் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் துறைமுகம் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...