500, 1000 ரூபாயை மாற்ற தபால் துறையின் சார்பில் பணபரிமாற்ற சேவை வாகனம் துவக்கம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில், தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை மாற்றிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்தினை சந்தித்து வரும் நிலையில், அதனைப்போக்கும் வகையில் தபால் துறையின் சார்பில் நடமாடும் பணபரிமாற்றச் சேவை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை அரசினர் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்த பணபரிமாற்ற சேவை வாகனத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

இதனால், பொதுமக்களின் நேரம் சேமிக்கப்படுவதாகவும், சிரமங்கள் குறைவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சேவை மையத்தில் பணத்தை பெறவும், டெபாசிட்டும் செய்ய முடியும்.



பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளின் நகல்களைக் கொடுத்து நபர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...