கோவையில் வந்தடைந்த டெல்லி இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்.

இந்திய விமானப் படை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப் படை சார்பாக டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப் படை பற்றிய கண்காட்சி வாகனம் கோவைக்கு வந்தது. அதன் ஒருபகுதியாக இன்று ஜி.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்துரையாடினர்.
 



இது குறித்து, டெல்லி இந்திய விமானப் படை இணை இயக்குநர் பணியாளர்கள் அதிகாரி ஜோசப் கூறுகையில்:- 
இந்திய விமானப்படை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை சார்பில் ஒரு கண்காட்சி வாகனம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.  இந்த வாகனம் ஜெய்ப்பூர், குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் சென்றும்  தற்போது கோயமுத்தூர் வந்தடைந்துள்ளது.



ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளோம். கோவையில் அமிர்த பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் விமானப்படை சம்மந்தமான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களும், விமானப்படையினர் உபயோகப்படுத்தும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் விமானப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு இக்கண்காட்சி ஊக்கம் அளிக்கும் என அவர் கூறினார்.



Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...