தேர்தலில் அபார வெற்றி: அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி  20ம் தேதி  அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். குடியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். 276 வாக்குகளபை் பெற்று டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அரசியல் பின்புலம்  அல்லாத ஒருவர் அமெரிக்க அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க அதிபர்களில் மிகவும் வயதான  அதிபரும் டொனால்டு டிரம்ப்பே ஆவார். இதனையடுத்து, வரும் டிசம்பர் 19ம் தேதி  பிரதிநிதிகள் கூடி  முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்வுடன் துணை  அதிபர்  தேர்வும் நடைபெறுகிறது. துணை  அதிபருக்கு ஜனநாயக கட்சி சார்பில் டிம்கைனே,  குடியரசுக் கட்சி சார்பில் மைக்பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போதைய அமெரிக்க அதிபராக பராக்  ஒபாமா உள்ளார்.  அவரது பதவிக்காலம் 2017 ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே, அமெரிக்காவின் 45வது புதிய அதிபரை தேர்வு செய்யும்  தேர்தல், அமெரிக்க நாட்டு  பாரம்பரியப்படி நவம்பர் மாதம் வரும் முதல்  திங்கட்கிழமைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையான  நேற்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி  சார்பில் ஹிலாரி  கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு   டிரம்பும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்து திட்டமிட்டபடி நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 20 கோடி பேர் இந்த  தேர்தலில் ஓட்டு போட  முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று  தங்கள் ஓட்டுக்களை செலுத்தினர்.  இந்த ஓட்டுப்பதிவு முடிந்ததும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணப்பட்டது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...